தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பனிச்சரிவில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது குறித்து மக்களுக்கு பயிற்சி!

காஷ்மீர்: பாரமுல்லாவில் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது குறித்து, கிராம மக்களுக்கு ராணுவத்தினர் பயிற்சி அளித்தனர்.

By

Published : Feb 9, 2021, 5:21 PM IST

காஷ்மீர்
காஷ்மீர்

இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் எதிர்பாராத விதமாக ஏற்படும் பனிச்சரிவில் சிக்கிக்கொள்வர்களை மீட்பதற்காக பிரத்யேக மீட்பு படை உள்ளது. இவர்கள் பனிச்சரிவில் சிக்கிகொள்பவர்களை மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பனிச்சரிவில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது குறித்து கிராம மக்களுக்கு, மீட்பு படையினர் நேரடி பயிற்சி அளித்தனர். அப்போது, கடைப்பிடிக்க வேண்டிய மீட்பு நெறிமுறைகள் குறித்தும், சார்ட்ஸ்(chords) உள்ளிட்ட மீட்புப்பொருள்களை உபயோகித்து பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்பது தொடர்பாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இது குறித்து பேசிய பனிச்சரிவு பிரிவின் பொறுப்பாளர் லெப்டினன்ட் பிரின்ஸ் ரோஹித், "பிர் பஞ்சலில் குளிர்மாத காலங்களில் ஏற்படும் பனிப்பொழிவை சமாளிக்க மீட்பு படையினர் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர். பனிச்சரிவுகளின் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை, பொதுமக்களுக்கு ஏற்படுத்த ராணுவம் முயற்சித்து வருகிறது. மக்களுக்காக ராணுவம் எப்போதும் துணை நிற்கும்" என்றார்.

இதையும் படிங்க:'எனக்கு ராஜாவாக வாழுறேன்' - சுட்டி இளவரசனின் குதிரைப் பயணம்!

ABOUT THE AUTHOR

...view details