அடிலாபாத் (தெலங்கானா):அடிலாபாத், நாகல்கொண்டாவில் வேறு மதத்தைச் சேர்ந்த இளைஞரை மகள் காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் சொந்த மகளையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், அடிலாபாத், நாகல்கொண்டா பகுதியைச் சேர்ந்த சமித்ரி பாய்- தேவி லாலா தம்பதியினரின் மகள் ராஜேஸ்வரி (20). இவரும் ஷேக் அலீம் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச்சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோர் அவர்களது திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ராஜேஸ்வரி, அலீம் இருவரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி 45 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து, ராஜேஸ்வரியின் பெற்றோர் மகளைக் காணவில்லை என நர்னூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்களின் செல்போன் சிக்னல்களைக்கொண்டு தேடியதில் மகாராஷ்டிராவில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காவல் துறையினர் ராஜேஸ்வரி, அலீமை தெலங்கானா அழைத்து வந்தனர். ராஜேஸ்வரியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அலீமை காவல்துறையினர் அழைத்துச்சென்றனர்.