ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் யூனியனில் உள்ள ஷாலடெங் இராணுவ கேரிசனில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பேரணி நடைபெறுகிறது.
1971 போரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய வெற்றியின் 50 ஆண்டை நினைவுகூரும் வகையில் ஷாலடெங் இராணுவ கேரிசனில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பேரணிக்கு இந்திய இராணுவம் ஏற்பாடு செய்திருந்தது.
ஒரு வாரம் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் சுமார் 160 ஓய்வுபெற்ற ஆயுதப்படை வீரர்கள் மற்றும் உயிரிழந்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டுவருகின்றனர்.
சிறப்பு அந்தஸ்து ரத்தாகி 2 ஆண்டுகள் நிறைவு... எப்படி இருக்கிறது காஷ்மீர்?
இது குறித்து மேஜர் ஜெனரல் சஞ்சீவ் சிங் ஸ்லேரியா கூறுகையில், “இந்தப் பேரணியின் நோக்கம் இராணுவத்தினர், முன்னாள் ராணுவ வீரர்களுடன் தொடர்பு கொள்வதும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதும் ஆகும்.
முன்னாள் படைவீரர்கள் சமுதாயத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதி. அவர்கள் ஓய்வுபெற்ற பிறகும் நாட்டுக்காக தங்கள் சேவையைத் தொடர்கிறார்கள்” என்றார்.
இதையும் படிங்க : ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை உயர்த்தப்படும்: பிரதமர்