தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலியல் வழக்கில் விசாரணை பெண் மீது துப்பாக்கிச்சூடு - நடுரோட்டில் நடந்த கொடூரம்

போலீஸ் ஐஜி உள்ளிட்டோருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய ஜார்க்கண்டை சேர்ந்த பெண், பாதுகாவலருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது மர்ம நபர்களால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு

By

Published : Dec 13, 2022, 10:53 PM IST

சகஜானந்த்(ஜார்க்கண்ட்): ஜார்க்கண்ட் மாநிலம், சகஜானந்த் மார்க்கெட் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த பெண், 3 மர்ம நபர்களால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுஷ்மா படாய்க், ஜார்க்கண்ட் மாநில மக்களுக்கு மிகவும் பரீட்சயமான பெயர். கடந்த 2005ஆம் ஆண்டு சுஷ்மாவின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சுஷ்மா பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடர்பாக போலீஸ் ஐ.ஜி, முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் 2012ஆம் ஆண்டு போலீஸ் ஐ.ஜி நடராஜன் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் கீழமை நீதிமன்றம் போலீஸ் அதிகாரி நடராஜனுக்கு சாதகமாக செயல்படுவதாகவும், மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கூறி சுஷ்மா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதையடுத்து சுஷ்மா மற்றும் அவரது குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற இருந்த நிலையில் பாதுகாவலருடன் இருசக்கர வாகனத்தில் சுஷ்மா சென்றபோது மர்ம நபர்களால் சுடப்பட்டார். இதில் சுஷ்மா உடலை இரு குண்டுகள் துளைத்தன. ஒரு குண்டு சுஷ்மாவின் உடலை துளைத்து வெளியேறிய நிலையில், மற்றொரு குண்டு உடலில் புகுந்தது.

மர்ம நபர்களை பாதுகாவலர் பிடிக்க முயன்ற நிலையில் அவர்கள் தப்பியோடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் சுஷ்மா அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் அடையாளம் காட்டியதில் டேனீஷ் என்பவரைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:இப்போது யார் பப்பு.? எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி.. அனல் பறந்த விவாதம்..

ABOUT THE AUTHOR

...view details