ஹாசன் (கர்நாடகா): கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹாசனாம்பா கோயில் வருடத்திற்கு ஒரு முறை தீபாவளி பண்டிகையை ஒட்டி ஒரு வாரக் காலம் மட்டுமே திறக்கப்படும். அந்த வகையில் நாளை மறுநாள் (நவம்பர் 12) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் கோவில் திறக்கப்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஹாசனாம்பா கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யப் பலர் வந்து செல்கின்றனர். இதனையடுத்து இன்று (நவ.11) வெள்ளிக்கிழமை என்பதால் பல ஆயிரம் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று (நவ.11) ஹாசனாம்பா கோயிலில் பல ஆயிரம் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் போது கோயிலிலுள்ள மின் வியரில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாகப் பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனையடுத்து, பக்தர்கள் பயந்து ஓடத் தொடங்கினர். கூட்டம் அதிகம் இருந்ததால் கூட்டத்தில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர் இதனால் இடிபாடுகளில் சிக்கி பலர் காயம் அடைந்தனர். உடனடியாக காவல் துறையினர் அவ்விடத்திற்கு வந்து நிலையைச் சரி செய்தனர். மேலும் காயம் அடைந்த பக்தர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்கைகாக அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:"மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது மிக முக்கியமான விவகாரம்" - தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து
இந்த சம்பவம் குறித்து ஹாசன் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் சுஜிதா தெரிவிக்கும் போது, "இந்த சம்பவம் சரியாக இன்று (நவ.10) மதியம் 1.30 மணிக்கு நடைபெற்றுள்ளது. மின் கசிவின் காரணமாகப் பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனையடுத்து பக்தர்கள் பயந்து ஓடியதால் கூட்ட நெரிசலில் சிக்கிப் பல பக்தர்கள் காயம் அடைந்துள்ளனர். மேலும், காயம் அடைந்தவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அபாய நிலையைத் தாண்டி உடல் நிலை சீராக உள்ளது என மருத்துவர்களால் தெரிவித்துள்ளனர். மேலும் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தற்போது கோயிலில் ஏற்பட்டுள்ள மின் கசிவு சரி செய்யப்பட்டுள்ளது மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சட்டென்று மாறிய வானிலை.. டெல்லியில் திடீர் மழை - காற்று மாசு சற்று நீங்கலாக காட்சியளிக்கும் தலைநகரம்!