தமிழ்நாடு

tamil nadu

குழந்தையை பறிகொடுத்த தாய்: போலீஸில் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட பரிதாபம்

By

Published : Nov 4, 2020, 8:03 PM IST

பிலிபட்: சத்தீஸ்கரைச் சேர்ந்த பெண் தனது எட்டு வயது குழந்தையைத் தேடி உத்தரப் பிரதேசத்திற்குச் சென்றார்.

mother
mother

சத்தீஸ்கரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கீதா. இவருக்கு எட்டு வயதில் மகன் ஒருவர் உள்ளார். சங்கீதா வேலைக்காக ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்குச் சென்றபோது ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபட்டைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண்ணிடம் தன்னுடைய மகனை விற்றதாக காவல் துறையினரிடம் சங்கீதா புகார் அளித்தார்.

இந்தப் புகரையடுத்து காவல் கண்காணிப்பாளர் ஜெயபிரகாஷ் யாதவ் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு ஐந்து மணி நேரத்தில் குழந்தையைக் கண்டுபிடித்தனர்.

ஷப்னம் பிலிபட் காவல் நிலையத்திற்கு வந்து, குழந்தை விற்கப்படவில்லை என்றும் சங்கீதாவே முன்வந்து தன்னிடம் குழந்தையை கொடுத்தாகவும் தெரிவித்தார். சங்கீதாவும் ஷப்னமும் ஒரே இடத்தில் வேலைபார்த்து வந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனது மகனை அவரால் பாரமரிக்க முடியாதால் சங்கீதா, ஷப்னமிடம் கொடுத்து அவனுக்கு நல்ல கல்வியும் நன்றாக கவனித்துக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டாகத் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதமாக ஷப்னமின் தொலைபேசி பழுதானதால் சங்கீதாவால் தனது மகனுடன் பேச முடியவில்லை. இதனையடுத்து அவர் சத்தீஸ்கரிலிருந்து பிலிபட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது சங்கீதாவுக்கு காவல் துறையினரின் உதவி தேவைப்பட்டதால் அவர் பொய்சொல்லியுள்ளதாகவும் இதற்காக சங்கீதா மன்னிப்பு கோரியதாகவும் ஜெயபிரகாஷ் யாதவ் கூறினார். தற்போது குழந்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அதன்பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details