தமிழ்நாடு

tamil nadu

காஷ்மீர் பண்டிட் சதீஷ் டீக்கோ கொலை வழக்கு ஒத்தி வைப்பு!

காஷ்மீர் பண்டிட் சதீஷ் டீக்கோ கொலை வழக்கை ஶ்ரீநகர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

By

Published : May 23, 2022, 10:27 PM IST

Published : May 23, 2022, 10:27 PM IST

Srinagar
Srinagar

ஶ்ரீநகர்: காஷ்மீர் பண்டிட் சதீஷ் டீக்கோவை, பிரிவினைவாத அமைப்பின் தலைவரான ஃபரூக் அஹமது தார் கொலை செய்ததாக கூறப்படுகிறது. சதீஷ் டீக்கோ கொல்லப்பட்டு சுமார் 31 ஆண்டுகள் கழித்து, அவரது குடும்பத்தினர் ஶ்ரீநகர் நீதிமன்றத்தில் ஃபரூக் அஹமது தாருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 10-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் வழக்கறிஞர் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஆஜராகவில்லை என தெரிகிறது. இன்று(மே 23) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் வழக்கறிஞர் மீண்டும் ஆஜராகவில்லை.

மனுதாரருக்கு வழக்கின் மீது ஆர்வம் இல்லை என்றும், அவர் நீதிமன்றத்திடம் தொடர்ந்து நேரம் மட்டுமே பெறுகிறார் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் வழக்கை, ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஃபரூக் அஹமது தார் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 1990-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2006-ல் சில மாதங்கள் ஜாமீனில் வெளியே இருந்தார். தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கிய புகாரில் 2019-ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கில் நாளை தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details