மகாராஷ்டிராவில் கரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து - 13 பேர் பலி
06:57 April 23
மும்பை: மகாராஷ்டிரா வாசை பகுதியில் கரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 13 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்
மகாராஷ்டிரா, பல்கார் மாவட்டம் வாசை பகுதியில் உள்ள விஜய் வல்லப் மருத்துவமனையில் இன்று (ஏப்ரல்.23) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த 13 கரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்தால் மற்ற நோயாளிகள், அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, நாசிக்கில் வாயு கசிவால் திடீரென ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதில் 24 பேர் உயிரிழிந்தது குறிப்பிடத்தக்கது.