தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிராப்ளம் செய்த பிரபல யூட்யூபர் போலீஸுக்கு அஞ்சி தப்பியோட்டம்... தகவலளிப்பவருக்கு ரூ.25ஆயிரம் பரிசு

தப்பியோடிய பிரபல யூட்யூபரான பாபி கட்டாரியா குறித்த தகவல் தருபவர்களுக்கு ரூ.25,000 பரிசு வழங்கப்படும் என டேராடூன் எஸ்எஸ்பி அறிவித்துள்ளார்.

By

Published : Aug 25, 2022, 7:24 PM IST

பிராப்ளம் செய்த பிரபல யூடியூபர் போலீசுக்கு அஞ்சி தப்பியோட்டம்...தகவலளிப்பவருக்கு பரிசு
பிராப்ளம் செய்த பிரபல யூடியூபர் போலீசுக்கு அஞ்சி தப்பியோட்டம்...தகவலளிப்பவருக்கு பரிசு

டேராடூன் சாலையில் போக்குவரத்தை நிறுத்தி நாற்காலியில் அமர்ந்து மது அருந்திவிட்டு, போலீஸாரை மிரட்டிய வழக்கில் தலைமறைவான யூட்யூபர் பாபி கட்டாரியா குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.25,000 பரிசு வழங்கப்படும் என டேராடூன் எஸ்எஸ்பி இன்று அறிவித்துள்ளார். முன்னதாக கட்டாரியாவுக்கு உள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து ஜாமீனில் வெளிவர முடியாதபடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கட்டாரியாவை கைது செய்ய போலீசார் ஹரியானாவுக்கு குழுக்களை அனுப்பியுள்ளனர்.

கடந்த வாரம், டேராடூனில் உள்ள கிமாடி மார்க் சாலையில் பாபி கட்டாரியா மது அருந்திய வீடியோ வைரலானது. "பாபி கட்டாரியா விரைவில் போலீசாரால் பிடிபடுவார். அவரது தலைக்கு வெகுமதி அளிக்க மாவட்ட காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது," என உத்தரகாண்ட் காவல்துறை தலைமை இயக்குனர் அசோக் குமார் தெரிவித்தார்.

கட்டாரியா மீது டேராடூனின் காவல் நிலையத்தில் 290/510/336/342 ஐபிசி மற்றும் 67 ஐடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றமும் காவல் துறையும் வழங்கிய சம்மனை கட்டாரியா ஏற்கவில்லை. முன்னதாக ஆகஸ்ட் 23அன்று, கட்டாரியா டேராடூன் சிஜேஎம் நீதிமன்றத்தில் சரணடைவதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடினார். அதன்பிறகு, காவல்துறை மற்றும் எஸ்ஓஜி உள்ளிட்ட புலனாய்வுக் குழுக்கள் அவரைப் பிடிக்க தேடுதல் வேட்டையைத் தொடங்கின. ஆனால், அவரை பிடிக்க முடியவில்லை.

அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு வீடியோவை பதிவேற்றினார். அதில் பின்னணியில் "ரோட்ஸ் அப்னே பாப் கி" பாடல் ஒலித்தது என்பது நினைவிருக்கலாம். முன்னதாக இவர் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் புகைபிடித்த பழைய வீடியோவைக் காட்டியதைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விசாரணைக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கட்டாரியா முன்னதாக சலசலப்பை எதிர்கொண்டார். இந்த இரு சம்பவங்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிராப்ளம் செய்த பிரபல யூடியூபர் போலீசுக்கு அஞ்சி தப்பியோட்டம்...தகவலளிப்பவருக்கு பரிசு

கட்டாரியா மது அருந்தும் வீடியோ வைரலாகப் பரவியதால், உள்ளூர் மக்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகள் வருகின்றன. அவர் 'தேவபூமி' என்று அழைக்கப்படும் உத்தராகண்ட் கலாசாரத்தை அழித்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:வெறுப்புப்பேச்சின் விளைவாக ஹைதராபாத் பதற்றமாகவுள்ளது என்ற ஓவைசி... பாஜக எம்எல்ஏ மீண்டும் கைது...

ABOUT THE AUTHOR

...view details