தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 2, 2022, 11:35 AM IST

Updated : Dec 2, 2022, 1:13 PM IST

ETV Bharat / bharat

காவல் நிலையத்தில் மது விருந்து! 7 பேர் கைது..

பாட்னா அருகே காவல்நிலையத்தில் மது அருந்திய விவகாரத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

பீகார்(பாட்னா):பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், காவல்நிலையத்தில் கைதிகள் மதுபானம் அருந்திய சம்பவம் அம்மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கி உள்ளது. பாலிகஞ்சில் உள்ள கலால்துறை காவல் நிலையத்தில், லாக்கப்பில் மது அருந்திய ஐந்து கைதிகள் பிடிபட்டனர். இந்த விவகாரத்தில், அப்போது பணியில் இருந்த 2 போலீசார் கைது செய்யப்பட்டனர்.

லாக்கப்பிற்குள் பார்ட்டி: கடந்த நவ.29-ல் வழக்கு ஒன்றில் 5 பேரை போலீசார் கைது செய்து காவல்நிலையத்தில் காவலில் வைத்துள்ளனர். இந்நிலையில், போலீசார் சிலரால், அன்றிரவே மதுபான பார்ட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோவாக பதிவு செய்து தங்களது குடும்பத்தினருடன் கைதிகளுள் ஒருவர் அனுப்பியதோடு, இங்கு எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

கைதிகளுடன் போலீசாரும் கைது!:உண்மையில், ஹஜாத்தில் இந்த கைதிகள் மது அருந்துவது போன்ற வீடியோவை யாரோ ஒருவர் அனுப்பியதாக பாலிகாஞ்ச் ஏஎஸ்பி அவதேஷ் தீட்சித் தெரிவித்துள்ளார். முன்னதாக அந்த 5 கைதிகளும் ஆன்லைனில் மதுபானம் வாங்கி லாக்கப்பிற்குள் வரவழைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணை:இது குறித்து பேசிய பாலிகஞ்ச் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவதேஷ் தீட்சித், 'சமூக வலைதளங்களில் பரவிய இந்த வீடியோ விவகாரத்தில், மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளபோதும், 2 போலீசாரின் உதவியுடன் இந்த 5 பேரும் லாக்கப்பில் மது அருந்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ததோடு, அந்த கைதிகளுடன் 2 போலீசாரும் கைது செய்யப்பட்டனர். மேலும், லாக்கப்பில் மதுபாட்டில்கள் எப்படி வந்தது என விசாரணை நடந்து வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லியில் தலைமறைவு பயங்கரவாதி கைது

Last Updated : Dec 2, 2022, 1:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details