தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உச்ச நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகள் பதவியேற்றனர்

உச்ச நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகள் பதவியேற்றுக்கொண்டனர்

புதிய நீதிபதிகள்
புதிய நீதிபதிகள்

By

Published : Feb 6, 2023, 11:42 AM IST

டெல்லி: உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய 3 பேர் உள்பட 5 பேர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இன்று (பிப். 6) பதவியேற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்றதில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34. இதுவரை 27 நீதிபதிகள் பணியில் இருந்த நிலையில், 7 நீதிபதிகளின் நியமனம் தொடர் இழுபறியாக நீடித்து வந்தது.

இந்த நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் 5 நீதிபதிகளின் பெயர்களும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. இருப்பினும், அவர்களது நியமனத்தில் தொடர் இழுபறி நீடித்துவந்தது. இதுதொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இதனிடையே உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரைக்கு ஜனவரி 4ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

அதன்படி உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளாக பணியாற்றிய 3 பேர் உள்பட 5 நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று (பிப்.6) பதவியேற்றுக் கொண்டனர். நீதிபதிகள் பங்கஜ் மித்தல், நீதிபதி சஞ்சய் கரோல், நீதிபதி சஞ்சய் குமார், நீதிபதி அசானுதீன் அமானுல்லா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. 2 இடங்கள் காலியாக உள்ள நிலையில் விரைவில் அதற்கான நியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:மூன்றாவது முறையாக கிராமி விருது வென்ற இந்திய இசையமைப்பாளர்!!

ABOUT THE AUTHOR

...view details