தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி சிறையில் 31 கைதிகளுக்கு HIV பாதிப்பு!

மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் சிஎம்எஸ் தலைமையில் அமைக்கப்பட்ட சுகாதார அதிகாரிகள் குழு நொய்டா சிறையில் உள்ள 2650 கைதிகளை சிறப்புப் பரிசோதனை செய்ததில் 31 கைதிகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Etv Bharatடெல்லி சிறை கைதிகள் 31 பேருக்கு எச்ஐவி தொற்று  உறுதி
Etv Bharatடெல்லி சிறை கைதிகள் 31 பேருக்கு எச்ஐவி தொற்று உறுதி

By

Published : Nov 24, 2022, 5:15 PM IST

டெல்லி: காசியாபாத் சிறையில் ஒரு வாரத்திற்கு முன்பு 140 கைதிகள் எச்ஐவி(HIV) தொற்று உறுதியானதையடுத்து தற்போது டெல்லி நொய்டா சிறையில் நடத்திய சோதனையில் 31 கைதிகளுக்கு எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டா சிறையில் உள்ள 2650 கைதிகளுக்கு இன்று (நவ.24) தலைமை மருத்துவ அதிகாரி பவன் குமார் தலைமையிலான மருத்துவ குழு பரிசோதனை நடத்தியது.

இந்த சோதனையில் 31 கைதிகளுக்கு எச்ஐவி தொற்று பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பவன் குமார் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். முன்னதாக காசியாபாத் சிறையில் இருந்த 5500 கைதிகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 140 கைதிகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தஸ்னா சிறையில் 35 கைதிகள் காசநோயால் பாதிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. சிறைக் கைதிகளிடையே உயிர்க்கொல்லி நோய் பரவி வருவது அனைத்து தரப்பினரிடையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:140 கைதிகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு.. அதிர்ச்சியில் அதிகாரிகள்!

ABOUT THE AUTHOR

...view details