தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 11, 2021, 12:30 PM IST

ETV Bharat / bharat

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூவர் கைது

தடைசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த மூன்று பேரை தேசிய புலனாய்வு முகமை நேற்று கைதுசெய்தது.

NIA in Kashmir  NIA  Jammu Kashmir  ஐ.எஸ்.ஐ.எஸ்  தேசிய புலனாய்வு முகமை  காஷ்மீர் தாக்குதல்  ஐ.எஸ்.ஐ.எஸ் சேர்ந்த மூவர் கைது
தேசிய புலனாய்வு முகமை

ஜம்மு காஷ்மீர்:ஸ்ரீநகர், தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் உள்ளிட்ட எட்டு இடங்களில், தேசிய புலனாய்வு முகமை நேற்று (அக்டோபர் 10) சோதனை நடத்தியுள்ளது. இதில் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த தவ்ஹீத் லத்தீப், சுஹைல் அஹ்மத், அஃப்சன் பர்வேஸ் ஆகிய மூன்று பேரை கைதுசெய்தனர்.

இந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பானது இந்திய அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதற்காக, இந்தியாவில் உள்ள இளைஞர்களை மதம் மாற்றி அவர்களிடம் தங்களது இயக்கத்தில் சேர்ப்பதற்கான சதி திட்டங்களைத் தீட்டிவருவதாகத் தகவல் கிடைத்துள்ளது என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்தது.

மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர், இணையதளம் மூலம் இந்தியாவில் இருக்கும் தங்களது அமைப்பைச் சார்ந்தவர்களிடம் தொடர்புகொண்டுள்ளதாகவும், அவர்களுக்கென போலி ஆன்லைன் அடையாளங்களை வைத்து ஒரு நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தின், ஐஎஸ்ஐஎஸ் தொடர்பாக நான்கு பேரை தேசிய புலனாய்வு முகமை கைதுசெய்தது. கைதானவர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் 'வாய்ஸ் ஆஃப் ஹிந்த்' என்ற பெயரில் மாதந்தோறும் ஆன்லைனில் ஓர் இதழ் வெளியிட்டு, இதன்மூலம் காஷ்மீரில் பயங்கரவாதத்தைப் பரப்பிவருவதாகவும் தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 10) நடைபெற்ற இந்தச் சோதனையில் மொபைல் போன்கள், மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்க்குகள் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் போன்ற பல முக்கிய ஆவணங்களை தேசிய புலனாய்வு முகமை பறிமுதல்செய்துள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சரை கொல்ல திட்டம்: இளைஞரைக் காப்பாற்றிய காவலர்கள்

ABOUT THE AUTHOR

...view details