தமிழ்நாடு

tamil nadu

இரண்டு சிலிண்டர்களுக்கான விலையை ஒன்றுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது - ராகுல் காந்தி

By

Published : May 8, 2022, 4:14 PM IST

பாஜக ஆட்சியில் இரண்டு சிலிண்டர்களுக்கான விலையை ஒரு சிலிண்டருக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்தார்.

Rahul Gandhi on LPG price hike
Rahul Gandhi on LPG price hike

டெல்லி: நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நேற்று (மே 7) ரூ. 50 உயர்த்தப்பட்டது. அதன்படி ரூ.965-க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, மார்ச் 22ம் தேதி சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. அப்போது, வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.104 உயர்த்தப்பட்டது.

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ1,508-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனங்களை எழுப்பிவருகின்றன. இதனிடையே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பாஜக ஆட்சியில் இரண்டு சிலிண்டர்களுக்கான விலையை ஒரு சிலிண்டருக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி, "காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 827 மானியத்துடன் ரூ. 410-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சியில் பூஜ்ஜிய மானியத்துடன் ரூ.999ஆக விலை உயர்த்தப்பட்டது. இப்போது இரண்டு சிலிண்டர்களுக்கான விலையை ஒரு சிலிண்டருக்கு கொடுக்க வேண்டியுள்ளது. நாட்டில் ஏழை, நடுத்தர குடும்பங்களின் நலனுக்காக காங்கிரஸ் மட்டுமே நல்லதுசெய்துள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வர்த்தக சிலிண்டர் விலை.. 26 நாட்களாக ஏறாத பெட்ரோல், டீசல் விலை...

ABOUT THE AUTHOR

...view details