ஹைதராபாத்: பூமியும் சந்திரனும் அவற்றின் சுற்றுப்பாதையில் இருக்கும்போது, விண்வெளியில் மிக நெருக்கமான சந்திப்பு நடைபெறும். அப்போது தெரியும் சந்திரன் சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது. மிகவும் அரிதான இந்த நிகழ்வு, இந்த ஆகஸ்ட் மாதத்தில் சூப்பர் மூன் இரண்டு முறை நடைபெறும்.
சூப்பர் மூன் நிகழ்வின்போது, நிலவின் ஒளியானது பிரகாசமாகத் தோன்றும். நிலவின் மேற்பரப்பு தெளிவாகவும் பெரியதாகவும் தோன்றும். இந்த நிகழ்வு வானியலாளர்கள் நிலவின் நிலப்பரப்பு, புவியியல் அம்சங்கள் மற்றும் தாக்கப் பள்ளங்கள் ஆகியவற்றை அதிக தெளிவுடன் ஆய்வு செய்ய எளிமையாக அமைகிறது.
சூப்பர் மூன் என்றால் என்ன?
சூப்பர் மூன் என்பது விண்வெளியில் ஒரு தனித்துவமான நிகழ்வு ஆகும். பெரிஜி எனப்படும் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான புள்ளிக்கு நிலவு வரும்போது இந்த கவர்ச்சிகரமான நிகழ்வு நிகழ்கிறது.
பூமியைச் சுற்றியுள்ள நிலவின் சுற்றுப்பாதை சரியான வட்டப்பாதை அல்ல; அது நீள்வட்டமானது, எனவே பூமியில் இருந்து நிலவின் தூரம் நிலவு, அதன் சுற்றுப்பாதையில் உள்ள இடத்தைப் பொறுத்து மாறுபடும். தொலைதூரப் புள்ளியில் (அபோஜி), சந்திரன் பூமியிலிருந்து சுமார் 4,05,000 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். அதே சமயம் நெருங்கிய புள்ளியில் அது சுமார் 3,63,104 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும்.
இதன் மூலம் சூப்பர் மூனின் போது, வானத்தில் நிலவின் அளவு மற்ற நாட்களில் உள்ள அளவை விட 14% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் இருக்கும்.
சூப்பர் மூன் எப்போது நிகழும்?
இந்த மாதம் நடக்கும் இரண்டு சூப்பர் மூன் நிகழ்வுகளில் முதலாவது சூப்பர் மூன் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தோன்றும். இது பூமிக்கு அருகில் 3,57,530 கி.மீ தொலைவில் இருப்பதால் வழக்கத்தை விட பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும்.
ப்ளூ மூன் என்றும் அழைக்கப்படும் இரண்டாவது சூப்பர் மூன் இன்று (ஆகஸ்ட் 30) இரவு நிகழும். அப்போது நிலா பூமிக்கு இன்னும் நெருக்கமாக வரும். பூமியில் இருந்து 3,57,344 கிமீ தொலைவில் தெரியும். ஒரே மாதத்தில் இரண்டு சூப்பர் மூன்கள் ஏற்படுவது ஒரு அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. கடைசியாக 2018ஆம் ஆண்டு இரண்டு சூப்பர் மூன்கள் தோன்றின. இனி இதுபோன்ற நிகழ்வு இன்னும் 15 வருடங்கள் கழித்து தான் நடக்கும். அதாவது 2037இல் ஒரே மாதத்தில் இரண்டு சூப்பர் மூன்களைக் காணலாம்.
சூப்பர் மூன் தோன்றுவதற்கான காரணம் என்ன?
இது குறித்து சென்னை பிர்லா பிளானட்டோரியத்தின் இயக்குனர் லெனின் தமிழ் கோவன் கூறியதாவது, "ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமி வந்தால் இரண்டாவது பௌர்ணமி ப்ளூ மூனாக அல்லது சூப்பர் மூனாக பார்க்கப்படும். இது ஒரு இயல்பான வானியல் நிகழ்வு தான். மேலும் ஒரு மாதத்தில் இரண்டாவது பௌர்ணமியில் நிலவின் வெளிச்சம் 14 சதவீதம் அதிகமாக தெரியும். இந்த நிலவு பெர்டஜி பாயிண்ட் பகுதியில் வருவதால் இயல்பாக வருவதை விட நிலவின் வெளிச்சமும் அதன் அளவும் அதிகமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:லெக்ராஞ்சியன் புள்ளியை இஸ்ரோ தேர்வு செய்தது ஏன்?- அதித்யா எல்-1 என்றால் என்ன? - விளக்குகிறார் விஞ்ஞானி எபிநேசர் செல்லச்சாமி!