தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரகாண்டில் 12 அடி உயர ஆதிசங்கரர் சிலை திறந்துவைத்த பிரதமர்

2013ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கில் சேதமடைந்த கேதர்நாத்தில் புதிய ஆதி சங்கரர் சிலை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

கேதர்நாத்
கேதர்நாத்

By

Published : Nov 5, 2021, 12:37 PM IST

உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத்தில் 12 அடி உயர ஆதி சங்கரர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.5) திறந்துவைத்தார். உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இன்று காலை வந்த பிரதமர் மோடியை ஆளுநர் குர்மித் சிங், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் கேதர்நாத் சிவன் கோயில் வழிபாடு செய்த மோடி, கோயில் வளாகத்தில் கட்டப்பட்டிருந்த ஆதி சங்கரர் சிலை திறந்துவைத்தார். சிலை அருகே அமர்ந்து சில நிமிடங்கள் தியாம் செய்தார்.

இந்தச் சிலையை கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்த சிற்பி யோகிராஜ் வடித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்படட் வெள்ளப்பெருக்கில் சங்கரரின் சமாதி சேதம் அடைந்தது. அது தற்போது புனரமைக்கப்பட்டு புதிய சிலையை அரசு அங்கு அமைத்துள்ளது.

உத்தரகாண்டில் ரூ.130 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை திறந்துவைத்த பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க:டெல்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details