உத்தரகாண்ட்(விகாஸ்நகர்): உத்தரகாண்ட் மாநிலம், சக்ரதாவில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு விகாஸ் நகர் நோக்கி இன்று (அக்.31) வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது வைலா என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இதில் 11 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.