புதுச்சேரி பிரெஞ்சு-இந்திய பகுதியாக காலனியாதிக்கத்தில் இருந்த காலத்தில் வாழ்ந்த நாராயணசாமி, அந்தக்கால அரசியல் நிகழ்வுகள் சிலவற்றையும் நினைவுப்படுத்தி கூறுகிறார். பிரெஞ்சு அரசுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போதிலும், அவர் தியாகிகளுக்கான எந்தவித உதவிகளையும் அரசிடம் பெறாமல் வாழ்ந்துள்ளார்.
105 வயதில் அனைத்துத் தேர்தலிலும் வாக்களித்த புதுச்சேரி நாராயணசாமி இது பற்றி தாத்தா நாராயணசாமியிடம் கேட்கையில், “அப்போது எனக்கு அது தேவையற்றதாக இருந்தது. இப்போது புதுச்சேரி அரசின் ஓய்வூதியத்தை நம்பித்தான் வாழ்ந்துவருகிறேன். புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து சீனியர் சிட்டிசன் என்ற முறையில் என்னை கௌரவித்து சில உதவிகள் செய்தார். புதுச்சேரி தேர்தல் துறையும் என் வீட்டிற்கு வந்து மூத்த வாக்காளர் என்ற வகையில் எனக்குச் சிறப்பு செய்தனர்” என்கிறார்.
1963ஆம் ஆண்டுதான் புதுச்சேரியின் முதல் சட்டப்பேரவை அமைந்தது. ஆனாலும் அந்தச் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறாமல் 1959ஆம் ஆண்டு சட்டப்பேரவை பிரதிநிதிகளையே இந்த சட்டப்பேரவைக்கு எம்எல்ஏ-க்களாக தேர்வு செய்துகொண்டனர். அடுத்து 1964ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முதல் 2016ஆம் ஆண்டு தேர்தல் வரை அனைத்துத் தேர்தல்களிலும் பெரியவர் நாராயணசாமி ஓட்டுப் போட்டுத் தனது ஜனநாயக கடமையை பிழையின்றி செய்துவந்திருக்கிறார்.
105 வயதில் அனைத்துத் தேர்தலிலும் வாக்களித்த புதுச்சேரி நாராயணசாமி புதுச்சேரியின் அனைத்துத் தேர்தல்களிலும் ஓட்டுப் போட்ட மிகச் சிலரில் நாராயணசாமியும் ஒருவராக இருக்கக் கூடும். தற்போது புதுச்சேரி அரசினை வழி நடத்திச் செல்ல 15ஆவது சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட உள்ள சூழலில், அந்தத் தேர்தலிலும் வாக்களிக்க போவதாக, நாராயணசாமி பெருமைபட கூறுகிறார்.
105 வயதில் அனைத்துத் தேர்தலிலும் வாக்களித்த புதுச்சேரி நாராயணசாமி அதுமட்டுமின்றி இன்று (பிப். 24) தான் படித்த பெத்திசெமினேர் பள்ளிக்கு சென்று மாணவனாக இருக்கையில் அமர்ந்து நினைவுகூர்ந்தார். 105 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கையின் வரலாற்றுச் சுவடுகள் பயணத்தில் நாராயணசாமியின் அனுபவங்கள் எண்ணற்றவை. அது அவரது அடுத்தத் தலைமுறைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நூறுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் நாராயணசாமியின் நல் வாழ்வும் தொடர்கிறது. உடலினை உறுதி செய் என்ற பாரதியின் வரிகளைப் போல எளிமையாக, தேவையான அளவு உணவை எடுத்துக்கொண்டு, அடுத்தத் தலைமுறைகள் ஆச்சரியப்படும் அளவிற்கு வாழ்ந்து வருகிறார் நாராயணசாமி.
இதையும் படிங்க...1971 போர் வெற்றியை பறைசாற்றும் வகையில் விமான படையின் சாகசம்!