தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

1000 கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடு, 50 கிலோ கோழி- மருமகனுக்கு சீர் செய்த மாமனார்

ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால், , 10 ஆடு, 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறி என மருமகனுக்கு சீர் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் புதுச்சேரியைச் சேர்ந்த மாமனார் ஒருவர்.

1000-kg-fish-ten-goat-50-kg-chicken-given-as-aadi-seer-in-pudhucherry
1000 கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடு, 50 கிலோ கோழி- மருமகனுக்கு சீர் செய்த மாமனார்

By

Published : Jul 20, 2021, 10:58 AM IST

Updated : Jul 20, 2021, 11:14 AM IST

புதுச்சேரி:தமிழர்கள் ஆடி சீர் கொடுத்து கொண்டாடுவதை போல் தெலுங்கு மக்கள் ஒவ்வொரு ஆண்டும் 'பொனாலு' என்கிற ஆஷாதம் (ஜூன்/ஜூலை மாதங்களில்) பாரம்பரிய நாட்டுப்புற விழாவை கொண்டாடுகிறார்கள்.
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் ஆஷாதம் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் ஆஷாதம் பாரம்பரிய விழாவை முன்னிட்டு, ஏனாமை சேர்ந்த பவன் குமாருக்கு ராஜமுந்திரியைச் சேர்ந்த அவரது மாமனார் பலராம கிருஷ்ணா வித்தியாசமான சீர்களை கொடுத்து அசத்தியுள்ளார்.

மருமகனுக்கு சீர் செய்த மாமனார்

தனது மகள் பிரத்யுஷாவை மருமகன் சிறப்பாக கவனித்து கொள்வதால் மகிழ்ச்சி அடைந்து, ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடு, 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறி, 50 வகையான இனிப்புகள் என வண்டி வண்டியாக மருமகனுக்கு சீர்-ஐ கொடுத்துள்ளார் பலராம கிருஷ்ணா.

வித்தியாசமான முறையில் சீர் கொடுத்த நிகழ்வு பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.

இதையும் படிங்க:மஜ்ஜி கௌரம்மா திருவிழா; மாட்டு வண்டி பூட்டி சீர் சுமந்து சென்ற பெண்கள்!

Last Updated : Jul 20, 2021, 11:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details