தமிழ்நாடு

tamil nadu

பரந்தூர் விமான நிலையம்: திட்ட அறிக்கை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! - parandur airport project

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2024, 10:59 PM IST

பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கான பெருந்திட்ட அறிக்கை மற்றும் திட்டத்தின் வரைபடம் தயாரிக்க ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு கோரியுள்ளது.

பரந்தூர்
பரந்தூர் (Credits - ETV Bharat Tamilnadu)

சென்னை: பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கான பெருந்திட்ட அறிக்கை மற்றும் திட்டத்தின் வரைபடம் தயாரிக்க ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு இன்று கோரியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 5,476 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிராக அப்பகுதி மக்கள் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு (Credits - ETV Bharat Tamilnadu)

இருப்பினும், பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி பசுமை விமான நிலையம் அமைக்கும் பணிகளில் தமிழக அரசு மும்முரம் காட்டி வருகிறது. விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தற்போது பெருந்திட்ட அறிக்கை மற்றும் வரைபடம் தயாரிக்க கோரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) ஒப்பந்தப்புள்ளி கோரி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:அசோக் நகர் அரசுப் பள்ளி சர்ச்சை: மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு; செப்.20 வரை நீதிமண்ற காவல்!

ABOUT THE AUTHOR

...view details