தமிழ்நாடு

tamil nadu

"சூப்பர் டேலண்டட் கிட்"..195 நாடுகளின் கொடிகளை சட்டென்று அடையாளம் கண்டு சாதனை படைத்த தெலங்கானா சிறுவன்! - Super talented kid

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2024, 9:25 PM IST

Updated : Sep 6, 2024, 11:01 PM IST

Super talented kid record: தெலங்கானாவை சேர்ந்த மூன்றரை வயது சிறுவன் 195 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டறிந்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

பெற்றோருடன் சாதனை சிறுவன் விராஜ் குராபதி
பெற்றோருடன் சாதனை சிறுவன் விராஜ் குராபதி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: 195 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டறிந்து கூறிய தெலங்கானாவை சார்ந்த மூன்றரை வயது சிறுவனின் திறமையை பாராட்டி இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் ‘சூப்பர் டேலண்டட் கிட்’ என்ற பட்டத்தை அவருக்கு வழங்கியுள்ளது.

சாதனை சிறுவன் விராஜ் குராபதி (Credits - ETV Bharat Tamilnadu)

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் பார்கவ தேஜா. இவரது மனைவி சினேகா. பார்கவ தேஜா கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் விராஜ் குராபதி. மூன்றரை வயதாகும் இவர் மழலையர் பள்ளியில் படித்து வருகிறார்.

விராஜ் பள்ளியில் படிக்கும் போது பாடங்களை மனப்பாடம் செய்வதில் மிகவும் திறமையாக இருப்பதை அறிந்த அவரது பெற்றோர் அவரது நினைவாற்றலை அதிகரிக்கும் வகையில் பல்வேறு பயிற்சிகளை அளித்து வந்துள்ளனர். அதன்படி, உலக நாடுகளின் கொடிகளை அடையாளம் காணும் பயிற்சியை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், விராஜ் 195 நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டியுள்ளார். விராஜின் இந்த நினைவாற்றகல் திறமையை பாரட்டி, இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (International Book of Records) மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (India Book of Records) அவருக்கு "சூப்பர் டேலண்டட் கிட்" (Super talented kid) பட்டம் மற்றும் IBR சாதனையாளர் என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.

இது குறித்து விராஜின் பெற்றோர்கள் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது, “ எனது மகன் விராஜ் 195 நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டறிந்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனைப் படைத்துள்ளார். மூன்றரை வயதில் விராஜ் சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சி. அவன் எளிதில் அனைத்தையும் புரிந்துக்கொள்வான்.

நாடுகளின் கொடிகள் பெயர்கள் தவிர்த்து, பல்வேறு விலங்குகள், பழங்கள், வடிவங்கள், நிறங்களின் பெயர்களையும் எளிதில் அடையாளன் கண்டறிந்து கூறுகிறார். மேலும், அவனுக்கு நடனம் உள்ளிட்ட செயல்பாடுகளிலும் அதிக ஆர்வம் உள்ளதால் அவனது திறமையை மேம்படுத்தும் வகையில் பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.

சிறுவனின் திறமைகளை கண்டறிந்த இண்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அவருக்கு "சூப்பர் டேலன்ட் கிட்" பட்டம் மற்றும் IBR சாதனையாளர் பட்டத்தை வழங்கியுள்ளது. மேலும் சிறுவனின் திறமைகளை கண்டறிந்து அவனை மேம்படுத்த முயற்சிகள் செய்வோம்” இவ்வாறு பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:திருபுவனத்தில் முதன்முறையாக பெண்களே யாக பூஜைகள், தமிழில் கும்பாபிஷேகம் செய்த விழா!

Last Updated : Sep 6, 2024, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details