மயிலாடுதுறை:மயிலாடுதுறை நகராட்சியுடன் ரூரல் ஊராட்சி மற்றும் மன்னம்பந்தல் ஊராட்சியை இணைப்பதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சியுடன் ஊராட்சி பகுதிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சியைச் சார்ந்த மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
கிராம சபை கூட்டம், முற்றுகை போராட்டம்:அதன்படி கடந்த அக்.2ஆம் தேதி நடந்த கிராம சபை கூட்டங்களில் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். இதையடுத்து அக்.3ஆம் தேதி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டத்தில் கிராம மக்கள் (Credits- ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:சென்னை ஏர் ஷோ; உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!
கருப்பு கொடியுடன் காத்திருப்பு போராட்டம்:இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் இன்று முதல் ஊராட்சியில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராமத்திலேயே தகர சீட்டாலான கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை:இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் தன்ராஜ் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.
கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் (Credits- ETV Bharat Tamil Nadu) பேச்சுவார்த்தை தோல்வி, தொடர் போராட்டம்:ஆனால் அவற்றை கிராம மக்கள் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்