திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த சந்திரன் (50) என்பவர் கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். மேலும், இவர் இரவு நேர காவல் பணிக்கும் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூலை 4ஆம் தேதி குன்னத்தூர் அருகே உள்ள கருமஞ்சிரை பகுதியில் இருந்த புதர் ஒன்றில் சந்திரன் தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், குன்னத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சந்திரன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் எதற்காக குன்னத்தூர் வந்தார், அவரை கல்லால் தாக்கி கொலை செய்தவர்கள் யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
போலீசாரின் அந்த விசாரணையில், சந்திரனின் மனைவி பார்வதி (40) மற்றும் திருப்பூரைச் சேர்ந்த ரவி (50) ஆகியோர் சேர்ந்து சந்திரனை கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்ய முயன்றபோது இரண்டு பேரும் தலைமறைவாகி இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களது செல்போன் டவர் மூலமாக தேடுதல் பணியைத் தொடர்ந்த போலீசார், அவர்கள் கேரளாவில் பதுங்கி இருப்பதைக் கண்டறிந்தனர். இதனை அடுத்து, கேரளாவில் பதுங்கியிருந்த 2 பேரையும் கைது செய்து திருப்பூருக்கு அழைத்து வந்தனர்.
மேலும் அவர்களிடம் சந்திரனை கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியபோது, கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. அதன்படி, சந்திரன் முதலில் திருப்பூரில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அதே நிறுவனத்தில் ரவியும் பணியாற்றி வந்துள்ளார்.