Video: கோயிலில் மேளம் அடித்து, ஹார்மோனியம் வாசித்த துணை ஜனாதிபதி!! - பெங்களூரு
🎬 Watch Now: Feature Video

பெங்களூரு(கர்நாடகா): பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று பெங்களூரு சென்றடைந்த துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை, கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் வரவேற்றார். இன்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தனது மனைவியுடன் பசவனக்குடியில் உள்ள தொட்டா கணேசா கோயிலில் சிறப்புப் பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். மேலும் அவருக்கு மேள, நாதஸ்வர வாத்தியங்களுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மேளம் அடித்து, ஹார்மோனியம் வாசித்தார். துணை ஜனாதிபதி கோயிலில் இசை வாத்தியங்கள் வாசித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.