Video:ஹாயாக செல்பி எடுத்த நபரை ஆக்ரோஷமாக துரத்திய யானை! - Erode elephant video
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: தமிழ்நாடு - கர்நாடகத்தை இணைக்கும் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உலாவும் விலங்குகள் முன்பு வாகன ஓட்டிகள் செல்பி எடுத்து தொந்தரவு செய்து வருவதால் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று(டிச.11) காலை பண்ணாரி சாலையில் நின்று கொண்டிருந்த ஒற்றை யானையின் முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் செல்பி எடுக்க முயன்றனர். அப்போது ஆத்திரமடைந்த யானை அவர்களை ஆக்ரோஷத்துடன் துரத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST