திண்டுக்கல்லில் திணறிய மாடுபிடி வீரர்கள் - தெறிக்க விட்ட காளைகள்! - 450 players
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் குட்டத்து ஆவாரம்பட்டியில் உள்ள பெரிய அந்தோணியார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் உள்ளூர் மாடுகளை தொடர்ந்து திண்டுக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட காளைகளும் 450க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிக்கொடுக்காமல் சீறி பாய்ந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மற்றும் வெள்ளி காசுகள், கட்டில், பீரோ, சேர், சைக்கிள் உள்ளிட்ட பல பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST