Watch video: பண்ணாரி வனத்தில் தண்ணீரின்றி தவிக்கும் புள்ளிமான்கள் - Deer sufering from scarcity of water at bannari forest area
🎬 Watch Now: Feature Video

பண்ணாரி சோதனைச்சாவடி அருகே உள்ள வனப்பகுதியில் புள்ளிமான்கள் அதிகளவில் உள்ளன. தீவனம் மற்றும் தண்ணீர் தேடி புள்ளிமான்கள் சாலையை கடந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது. தண்ணீர் தேடி அலையும் புள்ளிமான்கள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதால் அவைகள் தாகம் தீர்க்க பண்ணாரி வனத்தில் வனத்துறையினர் 6 சிறு தொட்டிகள் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி நிரப்பி வந்தனர். இந்த தண்ணீர் தொட்டியில் புள்ளிமான்கள், காட்டெருமை, பறவைகள், யானைகள் தண்ணீர் குடித்து தாகம் தீர்த்து வந்தன. கோடை தொடங்கி ஒரு மாதமே ஆன நிலையில், இந்த 6 தொட்டிகளில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிது. இதனால் அங்கு தாகத்தோடு வரும் புள்ளிமான்கள் தண்ணீரில்லாமல் தவிக்கின்றன.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST
TAGGED:
bannari forest area