Video: சென்னையில் கல்லூரி மாணவர்கள் கல்வீசி தாக்குதல் - சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே கல்வீச்சு தாக்குதல்
🎬 Watch Now: Feature Video
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று (ஏப்.11) மதியம் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் மாநில கல்லூரி மாணவர்களும், அரக்கோணம் ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் பயணம் செய்தனர். பெரம்பூர் ரயில் நிலையத்தை தாண்டியதும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாநில கல்லூரி மாணவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் பொறுமையிழந்த பயணிகள் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். உடனே கீழே இறங்கிய மாநில கல்லூரி மாணவர்கள் ஆத்திரத்தில் அருகே சென்ற அரக்கோணம் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அந்த ரயிலில் பயணித்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பதிலுக்கு மாநில கல்லூரி மாணவர்களை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தினர். இது குறித்து ரயில்வே காவல் துறையினர் கல்வீச்சு தாக்குதல் நடத்திய 15 மாநில கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST