கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச மெனோபாஸ் குழு (IMS) உலக சுகாதர மையத்துடன் சேர்ந்து அக்டோபர் மாதத்தை உலக மாதவிடாய் நிறுத்த விழிப்புணர்வு மாதமாக அறிவித்து அக்டோபர் 18ஆம் தேதியை உலக மெனோபாஸ் தினமாக நியமித்தது.
பெண்களிடையே மாதவிடாய் நிறுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களது ஆரோக்கியத்தை முன்னேறச்செய்து அவர்களை நல்வாழ்வுபடுத்துதலே இந்த நாளின் நோக்கமாகும். பெண்களின் வாழ்வில் இந்த மாதிவ்டாய் நிறுத்த கால கட்டத்தில் மாதவிடாய் சுழர்ச்சி நின்றுபோகும்.
அவர்களின் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் காலமும் இத்துடன் முடிந்துபோகும். மேலும், அவர்களின் உடல்நலத்தை இது வேறு வழிகளிலும் பாதிக்கும். எந்த ஒரு பெண்ணும் இதிலிருந்து தப்ப முடியாது.
மாதவிடாய் முழுவதுமாக நிற்பது மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலில், பெரி மெனொபாஸ்(Peri menopause) இது மாதவிடாய் நிறுத்தத்திற்கு 8 இல் இருந்து 10 வருடங்களுக்கு முன்பு இருக்கும் காலகட்டமாகும். தொடர்ந்து 12 மாதங்கள் பெண்களுக்கு மாதவிடாய் வராமல் இருந்தால் அவர்கள் மாதவிடாய் நிறுத்த கட்டத்தில் உள்ளதாக சொல்லலாம்.
இந்தக் கட்டத்திற்கு பெயர் தான் மெனோபாஸ்(Menopause), அடுத்தது இறுதியாக போஸ்ட் மெனோபாஸ்(Post menopause), இந்த காலகட்டம் பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு சந்திக்கும் இன்னல்கள். அவர்கள் வாழ்வில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய எற்ற இறக்கங்கள் ஏற்படும். பிற நோய்கள் வரவும் வாய்ப்புண்டு.
மேலும், வயது முதிர்ச்சியால் பெண்களுக்கு இந்நிலை வருவது இயல்பானதே. பொதுவாக 45 வயதிற்கு மேல் பெண்களின் எஸ்ட்ரோஜென் அளவு குறைய ஆரம்பிக்கும். வளர்ந்த சில நாடுகளில் இந்தக் கட்டத்தை 51 வயதில் பெண்கள் அடைகிறார்கள்.
இந்தியாவில் மாதவிடாய் நிறுத்தத்திற்கான வயது வரம்பு 46 - 47 வயது வரையாகும். இது பல வளர்ந்த நாடுகளிலுள்ள வயது வரம்பை விடக் குறைவாகும், 40 வயதிற்கு முன்னால் இந்த நிலையை அடைவதற்கு பெயர் ’பிரீமெட்சூர் மொனோபாஸ்’(Premature menopause) என அழைக்கப்படும்.
40 வயதிற்கு கீழுள்ள பெண்கள் இதனால் பாதிப்படைவதாகத் தெரிகிறது. பல பேருக்கு ஏன் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுகிறது என்ற சரியான காரணத்தையும் கண்டறிய முடிவதில்லை. எதிர்ப்பு சக்தி கோளாறு, குடும்பத்தோடு தொற்றி வருவது, பெண் உறுப்பு இன்ஃபெக்ஷன் போன்ற பாதிப்புகளால் அதனின் திசுக்கள் சேதம் அடைவது எனப் பல காரணங்கள் உள்ளது.
மாதவிடாய் நிறுத்த நிலையின் சில அறிகுறிகள்
- பெண் உறுப்பு வரண்டு இருப்பது
- உடலுறவு வைத்துக் கொள்ள கடினமாக இருப்பது
- சிறுநீர் கழிப்பதில் பாதிப்பு
- தூக்கமின்மை
- அதீத உணர்ச்சிகளின் மாற்றம்
- எரிச்சலூட்டும் எண்ணம்
- அழத் தோன்றுவது
ஆகியவை மாதவிடாய் நிறுத்தத்தின் சில அறிகுறிகளாகும்.
விரைவிலேயே மாதவிடாய் நிறுத்த நிலை வரக் காரணங்கள்
- நியாபக மறதி உட்பட பல்வேறு நரம்பு சார்ந்த பிரச்சனைகள்
- பெண்ணுறுப்பு செயலிழந்து போவது
- இதய நோய்
- எண்ணவோட்டம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள்
- ஆஸ்டியோபோரோசிஸ்
இதனால் பாதிக்கப்பட்டப் பெண்கள் செய்ய வேண்டியவை:
- அதிக நீராகாரம் எடுப்பது
- உணவில் அதிக கேல்சியமும், புரோத சத்துள்ள உணவுகளை உண்பது
- வைட்டமின் D எடுத்துக்கொள்வது
- உடற்பயிற்சி
- உங்களின் இணையரிடத்தோ, அல்லது நண்பர்களிடட்தோ மனது விட்டுப் பேசுவது
- காட்டன் ஆடைகளை அணிவது
- அதிக சூட்டில் இருப்பதைத் தவிர்ப்பது
- புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி முறையான இடையில் உடலை பராமரிப்பது
இதையும் படிங்க: ’என் அம்மா என்னை அடிச்சுட்டாங்க...!’ காவல் நிலையத்தில் 3 வயது சிறுவன் புகார்..