ETV Bharat / sukhibhava

கோவிட்-19 தொற்றுநோயினால் உருவாகும் மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி?

author img

By

Published : Aug 21, 2020, 12:32 PM IST

Updated : Aug 21, 2020, 12:56 PM IST

கோவிட்-19 தொற்றுநோயினால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிப்பது குறித்து விளக்குகிறார்கள் ஹைதராபாத், இந்திய பொது சுகாதார நிறுவன சமூக மற்றும் நடத்தை அறிவியல் துறையில் பணியாற்றும் டாக்டர் ஷில்பா சதானந்த், டாக்டர் நந்தா கிஷோர் கண்ணுரி ஆகியோர். இதுகுறித்து விரிவாக காண்போம்.

COVID-19 pandemic
COVID-19 pandemic

கரோனா வைரஸ் நோய் 2019 (கோவிட்-19) என்ற வார்த்தையை முதன்முறையாகக் கேட்டதிலிருந்தும், அதனால் உலகம் முழுவதும் எப்படி மாறியது என்பதிலிருந்தும் நாம் வெகுதொலைவு வந்துவிட்டோம். முகக்கவசங்களை அணிந்து கொள்வது, தனிமனித இடைவெளியை பராமரிப்பது என்பவை நமக்குப் புதிய இயல்பாக மாறியுள்ளது. தடுப்பூசி இல்லாத நிலையில், தொற்றுநோய்ப் பரவலைத் தடுப்பதற்கான மிக முக்கியமான யுக்திகளில் ஒன்று தனி மனித இடைவெளியாகும்.

விலகியிருத்தல் என்பது அடிப்படை மனித இயல்புகளுக்கு முரணானது, மற்றவர்களுடன் இணைந்திருப்பதற்கான ஆழ்ந்த மனித உள்ளுணர்வுகளுக்கு எதிரானது. குடும்பம் மற்றும் நண்பர்களுடனான தொடர்புகள் குறைந்து வெளியிடங்களுக்குச் செல்ல முடியாமல், குடும்ப விழாக்கள் எதுவுமில்லாமல், கோவிட்-19 தொற்றுநோய், நம் அனைவருக்கும் ஒரு பெரிய அழுத்தமாக மாறியுள்ளது.

குறிப்பாக, வைரஸைப் பற்றிய பயம் மற்றும் கவலையைக் கையாள்வது, நெருங்கிய குடும்ப உறுப்பினர் உடல் நிலை சரியில்லாமல் போவது பற்றிய கவலைகள், பொருளாதார சிக்கல்கள் போன்றவை காரணமாக வைரஸ் பாதிப்பில்லாத குடும்பங்களுக்குக்கூட மன அழுத்தத்தைத் தவிர்ப்பது என்பது இயலாததாகி உள்ளது.

தற்போது தொற்றுநோயுடன் வாழ்க்கை நடத்துவது என்பது பலருக்கு கடினமாக இருந்தாலும், குழந்தைகள், முதியவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், ஏழை மக்கள் மற்றும் மக்கள் தொகையில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரான தினசரி கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு மிகவும் சவாலாக உள்ளது. கோவிட்-19 தொற்று நோயைத் தடுக்க முன்னணியில் இருந்து போராடும் சுகாதாரப் பணியாளர்களை நாம் மறந்துவிடக் கூடாது.

எனவே, கோவிட்-19 தொற்றுநோய்க்கு பொது சுகாதார நடவடிக்கையின் ஒரு பகுதியாக மன ஆரோக்கியத்தைப் பற்றி, சிந்திக்க வேண்டியது அவசியம். கோவிட்-19 பரவலை சமாளிப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளில் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு முக்கிய செய்திகளைக் கொண்டிருக்க வேண்டும். தனிமனித இடைவெளியை பராமரிப்பதில் கவனம் செலுத்தும் அதே சமயம், பொது சுகாதார இயக்கங்கள் சமூக ரீதியாக இணைக்கப்படுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்த வேண்டும்.

கோவிட்-19 தொற்றுநோயினால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க பின்வரும் எளிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.

மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்: சுய தனிமை மற்றும் சமூக இடைவெளியானது சலிப்பு மற்றும் விரக்தி உணர்வுகளை ஏற்படுத்தும். தொலைபேசி அழைப்பின் மூலம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்பு கொள்ளுங்கள்; மகிழ்ச்சியான நிகழ்வுகளைப் பற்றி பேசுங்கள். இணையத்தில் அதிக நேரம் செலவிடுவது, தனியாக இருப்பது போன்ற தவறான சமாளிக்கும் முறைகளைத் தவிர்க்கவும்.

தினசரி நடைமுறைகளை கடைப்பிடியுங்கள்: தினசரி நடைமுறைகள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். சரியான நேரத்தில் சாப்பிடுங்கள், தூங்குங்கள், தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள், உங்கள் பொழுதுபோக்குகளை மீண்டும் தொடங்குங்கள், நீங்கள் விரும்பும் செயல்களில் ஈடுபடுங்கள். எப்போதும் போதுமான இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

மன அழுத்தங்களிலிருந்து விலகி இருங்கள்: கோவிட்-19 பற்றிய செய்திகளைத் தொடர்ந்து கேட்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். கோவிட்-19லிருந்து மீண்ட நபர்களின் நேர்மறையான அனுபவங்களைப் பற்றிய நேர்மறையான ஊக்கமளிக்கும் செய்திகளைக் கேட்பதன் மூலமாக பதற்றத்தைத் தூண்டும் எதிர்மறை செய்திகளைத் தவிர்க்கலாம்.

எதிர் மறை எண்ணங்களையும் உணர்வுகளையும் நிர்வகிக்கவும்: உங்கள் எண்ணங்கள், சரிதானா அவை உண்மையா? உங்களுக்கு உதவுமா? அவசியமா? என்று சோதிக்கவும். அது போன்ற எண்ணங்கள் சிக்கல்களைத் தீர்க்க உங்களுக்கு உதவாமல், அதற்குப் பதிலாக உங்கள் கவலைகளையும் சோகங்களையும் அதிகரிக்கிறது என்றால், அந்த எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மேகங்கள் போல அவற்றைக் கடந்து செல்ல அனுமதிக்கவும். காரணம் இல்லாத எண்ணங்களைத் தவிர்ப்பது எதிர்மறை உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் குறைக்க உதவுகிறது. கோவிட்-19 தொற்றுநோய் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், நம் எண்ணங்களையும் செயல்களையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் சொல்வதைக் கேட்பதன் மூலமும், அவர்களின் சிரமங்களை ஒப்புக்கொள்வது, அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்துவது, அவர்களுக்கு உறுதியளிப்பது, சிக்கல்களைத் தீர்ப்பதில் ஆதரவை வழங்குவது போன்ற செயல்கள் மூலம் அவர்களின் மன ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுங்கள். மொபைல் மற்றும் பிற சாதனங்களின் அதிகப்படியான பயன்பாட்டைத் தடுக்கவும், கேஜெட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், அவர்களுடன் மனம்விட்டு பேசவும். அவர்களின் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக பிற செயல்பாடுகளைப் பற்றி விவாதிக்கவும்.

திட்டங்களை உருவாக்குங்கள்: ஒரு தொற்றுநோயின்போது நோய் ஏற்படுவதைப் பற்றி கவலைப்படுவது என்பது இயல்பான ஒன்று. எனவே, கோவிட்-19இன் அறிகுறிகளைப் புரிந்துகொள்வதும் அறிந்து கொள்வதும் முக்கியம். எளிதில் அணுகக்கூடிய இடத்தில் அவசரத் தொடர்புகள் மற்றும் முக்கியமான தொலைபேசி எண்களை வைத்திருங்கள். நீங்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ நோய் வாய்ப்பட்டால், அருகிலேயே எந்த மருத்துவமனைகள் உள்ளன, அந்த கடினமான நேரத்தில் யார் உதவுவார்கள் என்பது போன்ற ஒரு எளிய திட்டத்தை உருவாக்குங்கள்.

பதற்றத்தை குறைக்கவும்: சுவாசப்பயிற்சி போன்ற கவலையைக் குறைக்கும் நுட்பங்களைப் பயன்படுத்துங்கள்; ஒரு வசதியான நிலையில் உட்கார்ந்து, உங்கள் தோள்களைத் தளர்த்தி, கண்களை மூடிக்கொண்டு, மூச்சை நிதானமாக மெதுவாக உள்ளிழுத்து மெதுவாக நான்கு வரை எண்ணி, உங்கள் வயிற்றை விரிவாக்கவும்; இரண்டு எண்ணிக்கை வரை அந்த மூச்சை நிறுத்திக் கொள்ளுங்கள்; ஆறு வரை மெதுவாக எண்ணி, உங்கள் வாய் வழியாக மூச்சை வெளியேற்றவும். இந்த சுவாசப் பயிற்சியை சுமார் 10 நிமிடங்கள் செய்யுங்கள்.

கோவிட் 19 காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைச் சமாளிக்க மேற்கூறிய தனிப்பட்ட நிலை நடைமுறைகளைத் தவிர, சமூகமாக சமாளிப்பது என்பது மிகவும் கடினம். ஏனெனில், கரோனா தொற்றுநோய் ஒரு தெளிவான முடிவு இல்லாமல் நீடித்துக் கொண்டே செல்கிறது. சமாளிக்கும் நடவடிக்கைகளை தொடர்வதற்கும், தற்போதைய தொற்றுநோயைக் கையாள்வதற்கும், ஆயத்தத்தை மேம்படுத்துவதற்கும் மீண்டு வரும் தன்மையை வளர்ப்பதற்கும் சமூக அளவிலான யுக்திகளை உருவாக்குவது முக்கியம். இதுபோன்ற எந்தவொரு முயற்சிகளுக்கும் சமூகங்கள், நோயாளிகள், அவர்களது குடும்பங்கள், பல கூட்டாளர்கள் மற்றும் துறைகளுடன் ஈடுபடுவது முக்கியம்.

சமூகம் மீளும் தன்மையை வலுப்படுத்த சில வழிமுறைகள்:

கோவிட்-19ஆல் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள தனி நபர்களுக்கும் குடும்பங்களுக்கும் ஆபத்துகால வகைப்படுத்தப்பட்ட ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்குவதற்காக ஆரம்ப சுகாதாரத்துடன் மனநல சுகாதார சேவைகளின் பயனுள்ள ஒருங்கிணைப்புத் தேவை.

வேலை இழந்த நபர்கள், சுகாதார மற்றும் அத்தியாவசியத் தொழிலாளர்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் உட்பட அனைவருக்கும் இந்த சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அடிப்படைத் தேவைகளுக்கும் மிகவும் ஆபத்தில் உள்ளவர்களுக்கும் மனநலம், நோய்த்தடுப்பு மற்றும் மருத்துவ வளங்களை மேற்கொள்வதற்கான வழிகளை அதிகரிக்க டிஜிட்டல் ஆரோக்கியத்தில் புதுமையான வழிகளை ஆராய்ந்து, வருவதற்கான யுக்திகளை உருவாக்கலாம்.

மீளும் திறனை ஊக்குவிப்பதற்காக சமூகம் மற்றும் தகவல் தொடர்பு யுக்திகள் மூலம் பல்வேறு சமூக அமைப்புகளை அமைத்து, எப்போது, ​​எங்கு உதவி பெறலாம் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தலாம்.

கோவிட்-19 சமூகத்தில் நீண்டகால மனோவியல் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. சமூக அடிப்படையிலான மீள்திறனை கட்டமைக்கும் முயற்சிகள்; சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் போன்ற கொள்கைகளின் அடிப்படையில் இருப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கு வலுவான அரசியல் உறுதியும் நடவடிக்கையும் தேவைப்படும்.

கட்டுரை ஆசிரியர்கள்: ஹைதராபாத்தின் இந்திய பொது சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.

கட்டுரையில் கூறப்பட்ட கருத்துகள் ஆசிரியர்களின் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே!

Last Updated : Aug 21, 2020, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.