விருதுநகர் அருகே முத்துசிவலிங்காபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் 2012-13ஆம் ஆண்டு தாய்சேய் திட்டத்தின் மூலம் மயானம் கட்டப்பட்டுள்ளது. ஊரிலிருந்து அந்த மயானத்திற்கு செல்ல அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதை இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், தரமான மயானம் இருந்தும் செல்வதற்கு பாதை இல்லாமல் சிரமப்பட்டு வருவதாகவும் இதற்கு முன்னதாக இந்த மயானத்திற்கு ஓடைக்கரை வழியை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது ஓடைக்கரையை தனியார் ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மயானத்திற்கு பாதை அமைத்து தர வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிங்க: