தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா குவளைக்கண்ணி பகுதியைச் சேர்ந்தவர் ரூபன். (42) இவர் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள சேத்தூர் ஆதிபுத்திர அய்யனார் கோயில் அருகே 10 ஏக்கரில் தென்னந்தோப்பு வாங்கி விவசாயம் செய்து வருகிறார்.
வழக்கம்போல் தோப்புக்கு வெளியே தனக்கு சொந்தமான காரை (சவர் லெட் பீட், TN 76 W1183 ) சாலை ஒரமாக நிறுத்திவிட்டு விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென காரின் பின்பகுதி தீ பற்றி எரிந்துள்ளது.
இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட காய்கறி வியாபாரிகள்!