ETV Bharat / state

சதுரகிரி கோயிலுக்குச் சென்று திரும்பும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு!

author img

By

Published : Oct 15, 2020, 9:05 AM IST

விருதுநகர்: பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.

returning-to-sathuragiri-temple
returning-to-sathuragiri-temple

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தரை மட்டத்திலிருந்து சுமார் நான்காயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்தக் கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாள்களில் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத் துறை அனுமதி அளித்துள்ள நிலையில் கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கிவருகிறது.

பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு நேற்றுமுதல் (அக். 14) வரும் 17ஆம்தேதி வரை மொத்தம் நான்கு நாள்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று பிரதோஷம் என்பதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து மலை ஏறி சாமி தரிசனம்செய்தனர்.

கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது சின்னபசுதடம் என்ற இடத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து வந்த ராமகிருஷ்ணன் என்பவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

பின்னர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் இட ஒதுக்கீட்டின் நிலை என்ன? உயர் நீதிமன்றக் கிளை கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.