உலகம் முழுவதும் கரோனா நோய் தொற்று தாக்கம் காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவில் 21 நாள்கள் தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வருகிற 14-ந் தேதிவரை ரூ.1000-க்கு டோர் டெலிவரி மூலம் 22 அத்தியாவசிய உணவு பொருள்கள் அடங்கிய பையினை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பூச்சிக்கொல்லி உபயோகப்படுத்தப்படாத மானாவாரி சாகுபடி விவசாய விளைபொருட்களான மஞ்சள், சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம், மிளகு, துவரம்பருப்பு, உருட்டு உளுந்து, பாசிப்பருப்பு, பாசிப்பயறு, கருப்பு சுண்டல், புளி, பொரிகடலை, சீனி, போர்மொச்சை, கோதுமை மாவு, பெருங்காயத்தூள், வத்தல், ரவை, சமையல் எண்ணெய், உப்பு மற்றும் சக்ராகோல்டு டீ தூள் ஆகிய 22 உணவுப்பொருள்கள் அடங்கிய 10½ கிலோ எடையுள்ள சிப்பம் 1000 ரூபாய்க்கு வீட்டிற்கே வந்து வழங்க விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
மாவட்ட மக்கள் அனைவரும் அரசின் ஊரடங்கு உத்தரவினை தவறாது தீவிரமாகக் கடைபிடித்து தங்களை தற்காத்துக் கொள்ள எங்கும் வெளியில் செல்லாமல் எளிதில் 1000 ரூபாய்க்கு அத்தியாவசிய உணவுப்பொருள்களை வீட்டிலிருந்தபடியே 97509 43814, 97599 43816, 92454 12800 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பெற்று பயனடையலாம் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.