சென்னை ஆர்.கே. நகரைச் சேர்ந்த 50 பேர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு இரண்டு வேன்களில் சென்று வழிபட்டுவிட்டு சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர்.
வரும் வழியில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிடாகம் என்னுமிடத்தில் வந்துகொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர், லேசான காயத்துடன் உயிர்தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துரையினர், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விபத்தால் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.