விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் ஏழுமலை தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நடத்திய தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம் ஏழுமலை தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தொடக்கி வைத்தார்.
மிளகு விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் கவலை!
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், "இறுதி ஆண்டு பட்டயப் படிப்பை முடித்து கல்லூரியை விட்டுச் செல்லும் மாணவர்களுக்கு அடுத்து உள்ள உயர்கல்வி வாய்ப்புகள், பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள், அந்த வேலைவாய்ப்புக்கான பல்வேறு விதமான போட்டித்தேர்வுகள், அப்போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் முறை தேவை.
சுயதொழில் தொடங்கி தொழில் முனைவோராக பெறுவதற்கு சரியான திட்டமிடல் வேண்டும். மாணவர்கள் உரிய இலக்கை அடைந்து, தங்களது எதிர்காலம் சிறப்பாக உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார். பட்டையபடிப்பு முடிந்து செல்லும் மாணவர்களுக்கான வழிகாட்டி கையேட்டினையும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டார்.
மேலும், மாணவர்கள் அனைவரும் தங்களது எதிர்காலம் குறித்து தொடரந்து முயற்சி செய்தால் வானம் வசப்படும் என்றார்.