ETV Bharat / state

அனுமதியின்றி பனங்கல் இறக்கியவர்களுக்கு காவல் துறை வலை!

author img

By

Published : Mar 10, 2020, 11:33 PM IST

விழுப்புரம்: செஞ்சி அருகேயுள்ள பூரி குடிசைப்பகுதியில் இருக்கும் பனை மரங்களில் பனங்கல் இறக்க கட்டப்பட்டிருந்த பானைகளை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.

பனங்கல்
toddy palm at viluppuram

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூரி குடிசைப் பகுதிகளில் இருக்கும் பனை மரங்களில் அனுமதியின்றி, சிலர் பனங்கல் இறக்கி வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

செஞ்சி மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினர், அந்தப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பனை மரங்களில் பானைகள் கட்டப்பட்டு கல் இறக்கப்பட்டு வந்துள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து பனைமரம் ஏறுபவர்களின் உதவியோடு மரத்தில் கட்டப்பட்டிருந்த பானைகளை அப்புறப்படுத்திய காவல் துறையினர், அனுமதியின்றி பனங்கல் இறக்கி விற்பனை செய்பவர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சீட்டு பணம் மோசடி - காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மூதாட்டி நூதன போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.