செஞ்சியை அடுத்த ஒட்டம்பட்டு கூட்டு சாலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலூரிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எந்த ஆவணமுமின்றி 99 ஆயிரம் பணம் இருந்தது.
காரில் வந்தவரிடம் விசாரித்ததில், வேலூரை சேர்ந்த பாலமுருகன் என்பதும், திருவெண்ணைநல்லூரில் உள்ள தனது மாமனாரின் மருத்துவ செலவிற்காக பணம் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இருப்பினும் உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து, செஞ்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: நடத்தை விதிகளை மீறியதாக திமுக நிர்வாகிகள் மீது வழக்கு!