விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா வண்டிப்பாளையம் கிராமத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு மோகன் என்பவரின் கூரை வீடு தீப்பற்றி எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் அருகாமையில் உள்ள வரதராஜன், தண்டபாணி, வீரமணி ஆகியோர் வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியது.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் தீ அணைக்கப்பட்டது . இந்த தீவிபத்தில் நான்கு வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இதில் 20 சவரன் தங்க நகை, ஐந்து லட்சம் ரொக்கப்பணம் என வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து திருநாவலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சீன அதிபர் வருகை - சென்னை போக்குவரத்து மாற்றம்!