வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் கல்லூரியில் படிக்கும் போது பழகியுள்ளார். இது நாளடைவில் ஒரு தலைக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அப்பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனையறிந் ஜெகன் அப்பெண்ணிடம் தன் காதலைத் தெரிவித்துள்ளார். ஆனால், அப்பெண் ஜெகனின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.
இன்று காலை அப்பெண் பேருந்தில் சென்று கொண்டிருக்கையில், அவரைப் பின் தொடர்ந்த ஜெகன் அவருக்குத் தாலி கட்ட முயன்றுள்ளார். இதனால் அப்பெண் கூச்சலிடவே பேருந்தில் இருந்த பயணிகள் அவரை அடித்தனர்.
பின் ஜெகனை வாணியம்பாடி காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஜெகனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் பேருந்தில் பெண்ணுக்குத் தாலி கட்ட முயன்றதால் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு - மத்திய துணைக் குழுவினர் ஆய்வு