ETV Bharat / state

நாட்டிலேயே முதல்முறையாக வேலூரில் அஞ்சல் தலை பூங்கா!

author img

By

Published : Jan 2, 2021, 7:19 PM IST

வேலூர்: நாட்டிலேயே முதல் முறையாக வேலூரில் அஞ்சல் தலை பூங்கா தொடங்கப்பட்டுள்ளதை நினைத்து அரசு அலுவலர்கள் பெருமிதம் அடைந்தனர்.

vellore stamp park
vellore stamp park

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே உள்ள தலைமை அஞ்சலகத்தில் நாட்டிலேயே முதல் முறையாக அஞ்சல் தலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளரான கோமல் குமார் தலைமையில் பொதுமக்கள் இந்தப் பூங்காவினை நேற்று (ஜன. 01) தொடங்கிவைத்தனர்.

இது குறித்து கோமல் குமார் கூறுகையில், "அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 200 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் பூங்கா தலைமை அஞ்சலக வாசல் அருகே உள்ள சிறிய இடத்தில் அமைந்துள்ளது.

முதலில் தாவரவியல் பூங்கா போன்று ஒன்றை ஏற்படுத்தலாம் என்று நினைத்தோம். இடம் சிறியதாக இருந்த காரணத்தினால் அஞ்சல் தலை பூங்காவாக உருவாக்கினோம்.

வேலூரில் தபால் தலை பூங்கா
வேலூரில் அஞ்சல் தலை பூங்கா

தமிழ்நாட்டின் பெருமை (Pride of Tamilnadu) மற்றும் வேலூரின் வரலாற்றை மைய கருத்தாக வைத்து இந்த அஞ்சல் தலை பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு வேலூர் கோட்டை, சிஏம்சி மருத்துவமனை, சிப்பாய் புரட்சி, ஊரீஸ் கல்லூரி ஆகியவற்றின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின்போது வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளும், தமிழ்நாட்டின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ள சில அஞ்சல் தலைகளையும் போஸ்டரில் பிரிண்ட் செய்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: இலவச தடுப்பூசி: மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த கரோனா வாரியர்ஸ்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.