வேலூர் மாவட்டம் தேவரிஷி குப்பம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார்,
தற்போது தேனியில் சர்ச்சைக்குரிய முறையில் வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்ற தகவலை எதிர்க்கட்சிகள் புகாராக தேர்தல் ஆணையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். எனவே தலைமை தேர்தல் அலுவலர் விரிவான விளக்கம் அளித்து அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்.
மோடிதான் பிரதமராக வருவார் என்று அமித்ஷா உட்பட பலர் மீண்டும் மீண்டும் கூறி வருவது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் அவர்கள் தேர்தல் ஆணைய அலுவலர்களை கொண்டு தில்லுமுல்லு செய்ய முயற்சிக்கிறார்களா என்று சந்தேகத்தை எழுப்புகிறது.
அமமுகவுக்கும் திமுகவுக்கும் ஏன் இந்த நேரத்தில் முடிச்சி போட முயற்சிக்கிறார்கள் என்று விளங்கவில்லை. அதிமுகவிற்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டதால் தான் இப்படிப்பட்ட தகவலைப் பரப்புகிறார்கள். திமுக மற்றும் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை அமமுகவுடன் இணைத்து பேசுவது அர்த்தமற்றது. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி விரும்புவதை நிறைவேற்றி தரக் கூடிய ஒரு சேவை அமைப்பாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்றார்.