ETV Bharat / state

ஒத்தைக்கு ஒத்தை வர்றியா... ஸ்டாலினை போட்டிக்கு அழைக்கும் அமைச்சர்!

வேலூர்: ஒத்தைக்கு ஒத்தை பார்ப்பதாக இருந்தால் மெரினா கடற்கரையில் பார்த்துவிடலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்துள்ளார்.

rajendra
author img

By

Published : Jul 31, 2019, 9:45 PM IST

தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பாலாறு அணையில் தடுப்பணை கட்ட வேண்டும். விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும், வேலூர் மக்களின் தண்ணீர் பிரச்னையை சரி செய்ய வேண்டும். எனவே, பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். இது குறித்து முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்வோம். அதற்கு நாங்கள் உதவுவோம்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது எடப்பாடி ஆட்சிதான் இதற்குக் காரணம். இந்த ஆட்சியை குறை சொல்வது மட்டும்தான் ஸ்டாலினின் வேலை. எவ்வளவு கேவலமாக பேச வேண்டுமோ அவ்வளவு கேவலமாக ஸ்டாலின் முதலமைச்சரை பார்த்து பேசுகிறார். முதலமைச்சரின் வளர்ச்சியை தகர்ப்பதற்காக ஸ்டாலின் காய் நகர்த்துகிறார், அதற்காக தனிப்பட்ட முறையில் எடப்பாடியை அவர் தரக்குறைவாக பேசுகிறார்.

ஸ்டாலினை போட்டிக்கு அழைக்கும் அமைச்சர்!

முதலமைச்சரை எங்கு தரக்குறைவாக பேசினாலும் ஸ்டாலினுக்கு சரியான சவுக்கடி கொடுப்போம். அவருக்கு மறுப்பு தெரிவிப்போம். அதிமுக தொண்டர்களை திமுக நெருங்கவே முடியாது. ஒத்தைக்கு ஒத்தை மன்னர் காலத்தில் நடந்ததுபோல் நேர்ந்தால்கூட சந்தித்துவிடுவோம். மெரினா கடற்கரையில் போட்டு பார்த்திரலாம். அதிமுக ஒரு பக்கம், திமுக ஒரு பக்கம் ஒத்தைக்கு ஒத்தை போட்டி வைத்துக் கொள்ளலாம். ஒரு நாளும் அதிமுகவை திமுக வீழ்த்த முடியாது. வாய் பேச்சாக இருந்தால்கூட ஊடகத்தில் வைத்துக் கொள்ளலாம். அதிமுக சார்பில் நான் வருகிறேன், திமுக சார்பில் யார் வேண்டுமானாலும் வாருங்கள். என்றைக்கும் அதிமுகவை திமுகவால் வீழ்த்தவே முடியாது” என்றார்.

Intro:இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்காக சரி செய்யும் வெளிநாட்டினருடன் ஸ்டாலின் கைகோர்த்துள்ளார் ஒத்தைக்கு ஒத்தை பார்ப்பதாக இருந்தால் மெரினா கடற்கரையில் பார்த்துவிடலாம் - திமுகவுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிBody:தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "சென்ற பொதுத் தேர்தலில் திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி பொது மக்கள் வாக்களித்தனர் அதன் மூலம் தான் திமுக வெற்றி பெற்றனர். இந்த தேர்தல் அதிமுகவுக்கு சாதகமாக அமையும் பாஜக ஓட்டு கேட்டு வரவில்லை என்று திமுக ஏன் வருத்தப்பட வேண்டும்? நாங்கள் தான் கவலைப்பட வேண்டும் ஸ்டாலின் வாயில் இருந்து வருவது அனைத்தும் பொய் தான் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்தான் ஸ்டாலின். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார் நெல லையில திமுக நிர்வாகியை கொலை செய்தது யார்? திமுக காரன் தான் கொலை செய்தார் இவ்வாறு கொலை செய்யும் கொள்கையை படைத்தவரகள் தான் திமுகவில் உள்ளனர் கொலை செய்தவர்கள் அனைவரும் திமுகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளனர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இவர்கள் இவ்வளவு அதிகாரம் செய்தால் ஆட்சிக்கு வந்தால் நம்மை போன்றோர் நடமாட முடியுமா? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது பச்சைத்தமிழன் எடப்பாடி ஆட்சி தான் இதற்குக் காரணம் இந்த ஆட்சியை குறை சொல்வது மட்டும் தான் ஸ்டாலினின் வேலை. எவ்வளவு கேவலமாக பேச வேண்டுமோ அவ்வளவு கேவலமாக ஸ்டாலின் முதலவரை பார்த்து பேசுகிறார் முதல்வரின் வளர்ச்சியை தகர்ப்பதற்காக ஸ்டாலின் காய் நகர்த்துகிறார் அதற்காக தனிப்பட்ட முறையில் எடப்பாடியை அவர் தரக்குறைவாக பேசுகிறார் தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகவே ஸ்டாலின் கட்சி நடத்துகிறார். அவருக்கு பணம் முழுவதும் வெளிநாட்டில் இருந்து தான் வருகிறது அது எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? என்று சொன்னால் சில பிரச்சினைகள் வரும் அவர் யாருடைய கைப்பாவை என்று இப்போதைக்கு சொல்ல மாட்டோம் சொல்லக்கூடிய நேரத்தில் பகிரங்கமாக நாங்கள் சொல்வோம் இந்தியா இன்று வல்லரசு நாடாக உருவாகிக்கொண்டிருக்கிறது தென்மாநில வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலின் செயல்படுகிறார் வெளிநாட்டு சக்திகள் மு க ஸ்டாலின் போன்ற கோமாளிகளை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர் இதை தடுப்பது தான் எங்களுடைய நோக்கம் நேற்று முன்தினம் கூட வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவோம் என்று முதல்வரை மிரட்டுகிறார். எனவே முதல்வர் எடப்பாடிக்கு மத்திய அரச பாதுகாப்பு கொடுக்க வேண்டும் ஸ்டாலின் நடந்து சென்றால் யாரும் ஒன்றும் செய்ய மாட்டார்கள் ஆனால் அவருக்கு மத்திய பாதுகாப்பு கொடுக்கிறார்கள். எனவே மக்கள் தலைவராக உருவாகியுள்ள எடப்பாடிக்கு மத்திய அரசு உடனடியாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் அவரை பாதுகாப்பது மத்திய அரசின் கடமை துரைமுருகன் பொதுப்பணித்துறை அமைச்சராக பலமுறை இருந்துள்ளார் ஆனால் அவர் இருக்கின்ற மாவட்டத்தில் பாலாற்றில் தடுப்பணை கட்டவில்லையே ஏன்? கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என ராகுல் கூறினார். அவருடன் ஸ்டாலின் கூட்டணி வைத்துள்ளார். மொழிப் பிரச்சினையை கிளப்பி 50 ஆண்டுகாலம் தமிழகத்தை நாசமாக்கியது திமுக தமிழர்களை சாதி மத ரீதியாக பிரித்து சண்டை மூட்டிவிட்டு ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார் தமிழக முதல்வரை பிரச்சாரத்தில் ஒருமையில் ஸ்டாலின் பேசி வருகிறார் ஸ்டாலின் குடும்பம் என்ன யோக்கியமா? கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தவர் ஒத்தைக்கு ஒத்தை பார்ப்பதாக இருந்தால் கூட மெரினா கடற்கரையில் போட்டு பாத்து விடுவோம" என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.