வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த எ-கஸ்பா காமராஜர் நகர் பகுதியில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்து தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பல மாதங்களாக அரசு அனுமதியின்றி இயங்கிவந்த தொழிற்சாலையில் ஆம்பூர் நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
பின்பு அத்தொழிற்சாலையில் சோதனை மேற்கொண்டதில் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் போலி தண்ணீர் பாட்டில்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். மேலும் அதனை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர். இச்செயலுக்கு சமூக ஆர்வலர்கள் இதே போன்று அனுமதியின்றி செயல்பட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பல நிறுவனங்களின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.