ETV Bharat / state

பேட்மிண்டன் போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பட்டம்

author img

By

Published : Aug 27, 2019, 6:19 AM IST

திருச்சி: கல்லூரிகளுக்கிடையேயான பேட்மிண்டன் போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி 7ஆவது முறையாக வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது.

trichy jamal college champion in Badminton

பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுவை, கரூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான பேட்மிண்டன் போட்டி நாக்-அவுட் முறையில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது. 21 அணிகள் பங்கு பெற்ற பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் மோதின.

இதில் 2-0 என்ற செட் கணக்கில் வென்ற திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி தொடர்ந்து 7ஆவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை வென்றது. மூன்றாம் இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் புதுக்கோட்டை ஜெ.ஜெ கலை அறிவியல் கல்லூரி, நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கலை அறிவியல் கல்லூரியை 2-0 என்ற செட் கணக்கில் வென்றது.

வெற்றி பெற்ற ஜமால் முகமது கல்லூரியின் மாணவர்களுக்கு, அக்கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால் முகமது, இணைச்செயலாளர் அப்துஸ் சமது, முதல்வர் இஸ்மாயில் முகைதீன், உடற்கல்வி இயக்குனர் ஆகியோர் பாராட்டு தெரிவித்தார்.

Intro:பேட்மிட்டன் போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.Body:

திருச்சி:
பேட்மிட்டன் போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழக இனைவு பெற்ற திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுகை, கரூர் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான பேட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நாக்- அவுட் முறையில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது.

21 கல்லூரி அணிகள் பங்கு பெற்ற பேட்மின்டன் இறுதி போட்டியில் திருச்சி, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியை 2-:0 என்ற செட் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தது. பேட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து 7வது ஆண்டாக ஜமால் முகமது கல்லூரி தக்கவைத்துகொண்டது.

மூன்றாம் இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாகை, இ. ஜி. எஸ். பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 2-:0 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாம் இடம் பிடித்தது.

வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ஜமால் முகமது கல்லூரி கல்லூரி மாணவர்களை கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால் முகமது, இணைச்செயலாளர் அப்துஸ் சமது, முதல்வர் இஸ்மாயில் முகைதீன், உடற்கல்வி இயக்குனர் பி.எஸ். ஷா இன் ஷா ஆகியோர் பாரட்டினர்.Conclusion:பேட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து 7வது ஆண்டாக ஜமால் முகமது கல்லூரி தக்கவைத்துகொண்டது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.