ETV Bharat / state

மக்களவைத் தேர்தலின்போது பேரவைக்கும் தேர்தல் - ஓபிஎஸ் ஆருடம்

author img

By

Published : Feb 11, 2022, 7:44 PM IST

இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு மரண அடி விழும் என திருச்சியில் பரப்புரையின்போது பேசிய ஓபிஎஸ், நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் என்றும் ஆருடம் கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு மரண அடி விழும் - ஓபிஎஸ்

திருச்சி: காஜாமலை பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிமுக, தமாகா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் பரப்புரை செய்தார்.

அப்போது பேசிய ஓபிஎஸ், "அதிமுக தொண்டர்கள் வீறுகொண்டு எழுந்துள்ளனர். 10 மாத மக்கள் விரோத ஆட்சி படுதோல்வி அடையச் செய்ய அதிமுகவிற்கு வாய்ப்பு அமைந்துள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சின்ன சறுக்கல். திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்ததால் அதிமுக சின்ன வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது சட்டப்பேரவை  தேர்தல் வரும் - ஓபிஎஸ்
நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது சட்டப்பேரவைத் தேர்தல் வரும் - ஓபிஎஸ்

படித்த பட்டதாரிகள் எண்ணிக்கை 52 விழுக்காடு உயர்த்தியது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சேரும். காவிரி நதிநீர் ஆணையம், பங்கீட்டுக் குழு அமைத்துத் தந்த அரசு அதிமுக.

கோவிட் காலத்தில் அதிமுக அரசு மக்களைக் காப்பாற்றியது. ஆனால், திமுக அரசில் யாரு செத்தால் என்ன பிழைத்தால் என்ன என்று இருக்கின்றனர் என ஓபிஎஸ் சாடினார்.

திருச்சி உள்ளாட்சித் தேர்தலில்  போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - திமுகவில் கோஷ்டி பூசல்

நீட் தேர்வு ரத்து முடியல முடியாது வாய் சவுடால் பேச்சு. திமுக பகல் வேஷம் கலைந்துவிட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு அதிமுக. பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து நிறைவேற்றத் தவறிய அரசு திமுக என்றார்.

திருச்சி காஜாமலையில்  ஓ பன்னீர்செல்வம் பரப்புரை

பொங்கல் பரிசை ஜெயலலிதாவே பார்த்துப் பார்த்து நல்ல பொருள்களைக் கொடுத்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிமுக அரசு 2500 வழங்கியது.

ஆனால் திமுக அரசு 100 ரூபாய்கூட வழங்கவில்லை. இது போன்ற கேள்விகளை மக்கள் கேட்பார்கள் என்ற எண்ணத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க திமுக அச்சம்கொண்டது.

நீட் தேர்வு: பொது மேடையில் விவாதிக்க தயார் - எடப்பாடி பழனிசாமி சவால்

பகட்டு அரசியல், விளம்பர அரசியல் செய்து ஆட்சியைப் பிடித்த திமுக முகமூடி கிழிந்துள்ளது. முழுவதுமாகக் கிழிக்க நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாய்ப்பாக அமைந்துள்ளது.

தகுந்த பாடம் திமுகவிற்குப் புகட்ட வாய்ப்பு இது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு மரண அடி விழும். நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும்" எனப் பேசினார்.

இதையும் படிங்க: 'தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் அதிமுகதான் வெல்லும்!'

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.