கர்நாடகாவில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால், அங்கு அணைகள் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிந்ததையடுத்து, காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில், தற்போது 112 அடிவரை நிரம்பியுள்ளது. இதனால் அணையிலிருந்து 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் முக்கொம்பு வழியாக கல்லணையை வந்தடைந்தது.
இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக கல்லணையிலிருந்து இன்று நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆறு மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.