ETV Bharat / state

முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தைக் கைவிட்ட விவசாயிகள்!

திருப்பூர்: காங்கேயத்தில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர்.

Farmers abandon fast at Chief Minister's request!

author img

By

Published : Jan 24, 2021, 9:28 AM IST

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் - கோவை சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு காங்கேயம்-வெள்ளகோவில் நீர் பாதுகாப்புக்குழு சார்பில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தின் (பிஏபி) வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் பாசனத்துக்கு சட்டப்படி தண்ணீர் விட வலியுறுத்தி தொடர்ந்து 5 நாள்களாக 26 விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று (ஜன.23) காலை கோவையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை உண்ணாவிரத குழுவினர் சந்தித்தனர். அவர்களிடம் முதலமைச்சர் கேட்டுக் கொண்டதன் படி, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாக போராட்டக் குழுவின் தலைவர் வேலுச்சாமி அறிவித்தார்.

மேலும், இப்பிரச்னை தொடர்பாக திங்கள்கிழமை (ஜன.25) சேலத்தில் முதலமைச்சரை சந்தித்து பேசுவதற்கு போராட்டக் குழுவினருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, உண்ணாவிரதம் இருந்த 26 விவசாயிகளுக்கும் பழச்சாறு கொடுத்து, உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:பவானிசாகர் அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.