கரோனா வைரஸ் பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இதனால் மாநிலத்திலுள்ள திரையரங்குகள், சுற்றுலாத்தலங்கள், பூங்காக்கள், மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அடிக்கடி கைகளை தண்ணீரால் கழுவ வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி மக்களுக்கு விழிப்புணர்வு பரப்புரை செய்து வருகின்றனர்.
ஆனால் திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 40ஆவது வார்டு பாரதி நகர் பகுதியில் 15 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தாராபுரம் சாலையில் காலி குடத்துடன் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் மக்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை