வேலூரிலுள்ள நேதாஜி மார்க்கெட்டில் பணிபுரிந்துவரும் சுப்பிரமணி என்பவரிடம் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் கத்தியைக் காட்டி மிரட்டி ஒரு தங்க செயின், செல்போன் ஆகியவற்றைப் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரையடுத்து விரைந்து செயல்பட்ட காவல் துறையினர், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜவகர் ராஜ்(21), அஜய்(21) ஆகிய இரண்டு இளைஞர்களைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து இரண்டு சவரன் தங்கச் சங்கிலியையும் செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வேலூர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை - இருவர் கைது; 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்!